எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி.. மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா பரபரப்பு பேச்சு

Assembly Election 2026 : எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதிதான் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.

Published on: April 8, 2026 at 11:14 am

சென்னை, ஏப்.8, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க அங்கம் வகிக்கிறது. இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.7, 2026) கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.

திருமணம்

அப்போது அவர் பேசுகையில், “கலைஞர், கேப்டன் இடையே 50 ஆண்டுகால நட்பு இருந்தது. எங்கள் திருமணத்தையே கலைஞர் தான் நடத்தி வச்சார். எனினும், இவ்ளோ வருஷம் ஏன் இந்த தேமுதிக- திமுக கூட்டணி அமையவில்லை என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

விஜயகாந்த் இறுதிச் சடங்கு

மேலும், “கேப்டன் மறைவின் போது அண்ணன் ஸ்டாலின், உதயநிதி உள்பட அனைத்து அமைச்சர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்கள். உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை நாங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இதையும் படிங்க : ஆலங்குளத்தில் பனை விவசாயி மீது துப்பாக்கிச் சூடு.. எஸ்.ஐ இசக்கி ராஜாவும் காயம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com