தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

Assembly Election 2026: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Published on: April 7, 2026 at 5:02 pm

சென்னை, ஏப்ரல் 7 2026: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை 4 நாட்கள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் சட்டம்-ஒழுங்கை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவிற்கு முன் 48 மணி நேரம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆம் தேதியும் மதுபான கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பணம் மற்றும் மதுபானம் மூலம் வாக்காளர்களை பாதிக்காமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பொறுப்பில் இருந்த போதும் நினைத்ததை செய்ய முடியவில்லை.. பழனிவேல் தியாகராஜன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com