ஸ்டாலின் மீது அபாண்ட பழி போடுகிறார்.. எடப்பாடி மீது வைகோ குற்றச்சாட்டு!

Assembly Election 2026 : திமுக தலைவர் மு க ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிச்சாமி அபாண்டமாக பழி போடுகிறார் என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Published on: April 4, 2026 at 2:02 pm

சென்னை ஏப்ரல்,4 2026; தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான MK ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிச்சாமி அபாண்டமாக பழி போடுகிறார் என அதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கு தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கிறது; எந்தக் கட்சிக்கு கூட்டணியில் நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக வின் சின்னத்தில் அக்கட்சிப் போட்டியிடுகிறது; மீதமுள்ள மூன்று தொகுதிகளிலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

எடப்பாடி மீது வைகோ குற்றச்சாட்டு

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மீது வைகோ குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய வைகோ, ‘ கண்ணை இமை காப்பது போல், கருணாநிதியை ஸ்டாலின் பாதுகாத்தார்; ஆனால் மோடியின் கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் மீது அபாண்டமான பழியை போடுகிறார்.

திருமணமான ஐந்தாவது மாதத்திலேயே, மிஷா சட்டத்தின் கீது கைதாகி கொடுமைகளை அனுபவித்தவர் ஸ்டாலின். தியாக பிம்பமான ஸ்டாலின் அரும்பாடுபட்டு முதலமைச்சர் பதவிக்கு புகழ் சேர்த்துள்ளார். இனியும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி பேசினால் என் தாக்குதலுக்கு பயந்து அவர் அரசியல் களத்தில் இருந்து ஓட கூடும்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் பாஜக- காங்கிரஸ்.. எந்த தொகுதிகள் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com