Lord Murugas Kavadi song : சுவாமி பத்மேந்திரா இயற்றி புஷ்பவனம் குப்புசாமி பாடிய என்னப்பா! பழனியப்பா! முருகன் காவடிப் பாடல் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது.
Lord Murugas Kavadi song : சுவாமி பத்மேந்திரா இயற்றி புஷ்பவனம் குப்புசாமி பாடிய என்னப்பா! பழனியப்பா! முருகன் காவடிப் பாடல் வெளியிடும் விழா சென்னையில் நடந்தது.

Published on: April 4, 2026 at 11:03 am
சென்னை, ஏப்.4, 2026: சென்னை வன்னிய தேனாம்பேட்டை காமராஜர் தெருவில் எழுந்தருளிள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ கங்கையம்மன் மூகாம்பிகை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் முன்னிட்டு வள்ளலார் பேரவை தமிழ்நாடு மாநிலத் தலைவர் “ஆதி மகா சாது”சுவாமி பத்மேந்திரா இயற்றி, திரைப்படப் பின்னணிப் பாடகர் “கலைமாமணி”டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி இசையமைத்துப் பாடிய “என்னப்பா! பழனியப்பா! முருகன் காவடி பாடல்” வெளியிடும் விழா சென்னையில் மார்ச் 23, 2026ல் நடைபெற்றது.
இந்த விழாவில் சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் முனைவர் வீ.நாகநாதன் தலைமையில் திரைப்படப் பின்னணிப் பாடகி டாக்டர் அனிதா குப்புசாமி அவர்கள் முன்னிலையில் சென்னை தபஸ்யா நடனப்பள்ளி இயக்குனர் ஏ.கே.பி சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
என்னப்பா! பழனியப்பா! முருகன் காவடிப் பாடலை முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகு கவி செ.ராஜேந்திரன் வெளியிட சாய் சமர்ப்பண அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெ என் ஜெகத் ராம்ஜி மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர் மாசானமுத்து ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினராக திரைப்படப் பின்னணி பாடகர் இன்னிசை இளவல் டாக்டர் பிரபாகர்,இசைக்குழு ஒருங்கிணைப்பாளர் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள், டி.டி. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கலைவாணி
நிகழ்ச்சி நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து சென்னை மேற்கு மாம்பலம் குரு ரத்னமாலா சரவணன் தலைமையில் தபஸ்யா நாட்டியயப்பள்ளி மாணவியர்கள் பரதநாட்டியம் நடைப்பெற்றது. நன்றியுரையை விழாக் குழுத் தலைவர் குமார் வழங்கினார். தொடர்ந்து நடைப் பெற்ற அருள்மிகு ஓம் ஸ்ரீ கங்கையம்மன் முகாம்பிகை அலயம் மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இவ்விழாவில் திருக்கைலாய கந்த பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீ மத் சிவாக்கார தேசிக சுவாமிகள் அருளாசி வழங்கினார்கள்.
இந்த விழா ஏற்பாடுனை மோகன்ராஜ், சரவணன் கந்தன் செந்தில் ராஜ்குமார் (எ) கோபி, மற்றும் சூர்யா விழா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
இதையும் படிங்க: கருப்பு உடை, வைர நெக்லஸ்.. கவர்ச்சியாக தோன்றிய ராதிகா மெர்சென்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com