Radhika Merchant: ராதிகா மெர்சன்ட், அனந்த் அம்பானியுடன் கருப்பு உடையில், வைர நகைகள் அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார்.
Radhika Merchant: ராதிகா மெர்சன்ட், அனந்த் அம்பானியுடன் கருப்பு உடையில், வைர நகைகள் அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார்.

Published on: April 1, 2026 at 1:09 pm
மும்பை, ஏப்.1, 2026: மிஷ்கா கம்போஜ் பிறந்தநாள் விழாவில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சென்ட் தம்பதி ஒரே மாதிரி கருப்பு உடையில் கலந்து கொண்டனர். ராதிகா அழகான கருப்பு உடையுடன், நவீன வைர நகைகளை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நீத்தா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, அவரது மனைவி ராதிகா மெர்சன்ட் ஆகியோர், ஆக்ஷா கம்போஜ் மற்றும் மோகித் கம்போஜ் தம்பதியரின் மகள் மிஷ்கா கம்போஜின் பிறந்தநாள் விழாவில் மார்ச் 28 அன்று மும்பையில் கலந்து கொண்டனர். பொதுவாக, ராதிகா மெர்சன்ட் தனது அற்புதமான ஆடைத் தேர்வுகளால் எப்போதும் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவர், திருமணத்தின் போதும் அழகிய ஆடைகள் அணிந்து காணப்பட்டார்.
அந்த வகையில், இந்தியாவின் சிறந்த ஆடை அலங்கார பெண்களில் ஒருவராக அவர் திகழ்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. இதை ராதிகா, மீண்டும் நிரூபித்தார்; நேற்று மிஷ்கா கம்போஜின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது அவரது அழகிய தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த விழாவில், ராதிகா அழகான கருப்பு உடையுடன், நவீன வைர நகைகளை அணிந்து காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன அழகு.. எத்தனை அழகு.. மராத்தி பாரம்பரிய உடையில் சாரா தெண்டுல்கர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com