ஈரான் ராணுவ கட்டமைப்புகளை தாக்கி அழித்த அமெரிக்க.. வீடியோ பகிர்ந்த ட்ரம்ப்!

Iran America war: 2 அல்லது 3 வாரத்தில் ஈரான் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Published on: April 1, 2026 at 11:09 am

Updated on: April 1, 2026 at 11:10 am

வாஷிங்டன், ஏப்.1, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிரான போர் இன்னும் 2–3 வாரங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஆபரேஷன் எபிக் ஃப்யூரி எனப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கை விரைவில் நிறைவடையும் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அனைத்து திறன்களையும் முறியடித்த பிறகு பிராந்தியத்திலிருந்து விலக விரும்புவதாகவும், அதற்கு முன் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, “ஈரானின் அச்சுறுத்தலை நிரந்தரமாக அழித்து, அவர்கள் அணு ஆயுதம் பெற முடியாதபடி செய்வதே எங்கள் முதல் நாளிலிருந்தே தெளிவான பணி” என்றார்.

ட்ரம்ப் அதிருப்தி

இதற்கிடையில், டிரம்ப், சர்வதேச கூட்டாளிகள் போதுமான பங்கு எடுக்கவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்று; உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20% இங்கு நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஈரானின் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், அங்கு உண்மையான அச்சுறுத்தல் இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், அமெரிக்கா தனது படைகளை ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்கும் பணியில் இருந்து இப்போதைக்கு திரும்பப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரான் ராணுவ கட்டமைப்புகளை தாக்கி அழித்த அமெரிக்க.. வீடியோ பகிர்ந்த ட்ரம்ப்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com