Assembly election 2026: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவது குறித்து, நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Assembly election 2026: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவது குறித்து, நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published on: March 31, 2026 at 6:16 pm
மதுரை மார்ச் 31, 2026; தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி, எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை துரிதப்படுத்தி வருகின்றன; தேசிய கட்சிகளான காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் பாஜக அதிமுக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி பயணிக்கிறது; இந்தக் கட்சிக்கு கூட்டணியில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி-க்கு புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சுந்தர் சி வீடியோ
நன்றி 🙏🏼 pic.twitter.com/hfFrzjAoyT
— Sundar C (@SundarCOffl) March 30, 2026
இந்த நிலையில் முதல் முறையாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ள சுந்தர் சி, தனக்கு மக்கள் சினிமாவில் ஆதரவு வழங்கியது போல், தனது புது முயற்சியிலும் ஆதரவு வழங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது; கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சுந்தர் சி சினிமாவில் பயணித்து வருகிறார். இவர் தற்போது வரை பல வெற்றிப் படங்களை இயக்குனராகவும் நடிகராகவும் கொடுத்துள்ளார்.
சுந்தர் பி போட்டியிடுவதால் மதுரை மத்திய தொகுதி பெரும் கவனம் ஈர்க்கும் தொகுதியாக மாறி உள்ளது; இந்தத் தொகுதியில் திமுக சார்பில், பி டி ஆர் எனப்படும் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்; இவர் தான் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முதன் முதலில் நிதி அமைச்சராக இருந்தார்; பின்னர் பெரிதளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு அமைச்சர் பதவி இவருக்கு வழங்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; விஜய் ஒரு மாய பிம்பம்.. பேசி பெரிதாக்க வேண்டாம்.. திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com