Dhurandhar The Revenge: துரந்தர் 2 சிகரெட் ஸ்மோக்கிங் காட்சி தொடர்பாக நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
Dhurandhar The Revenge: துரந்தர் 2 சிகரெட் ஸ்மோக்கிங் காட்சி தொடர்பாக நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

Published on: March 25, 2026 at 11:38 am
மும்பை மார்ச் 25 2026; துரந்தர் 2 சிகரெட் ஸ்மோக்கிங் காட்சி தொடர்பாக நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அந்த காட்சி, சீக்கிய சமூகத்தை அவமதிக்கும் நோக்கில் எடுக்கப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இது குறித்து நடிகர் மாதவன் மேலும் பேசுகையில், சிகரெட் அணைக்கப்பட்ட பிறகு தான், குரு கோபிந்த் சிங் ஜி அவர்களின் தசம் கிரந்த் வசனங்கள் பேசப்பட்டன என்றார்.
மேலும், திரையில் புகை எங்கும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அவர், சீக்கிய சமூகத்திற்கான மரியாதையை மீண்டும் வலியுறுத்தி, புரிதலுடன் அணுகுமாறு கேட்டுக்கொண்டார்” என்றார்.
இன்ஸ்டாகிராமில் நடிகர் மாதவன்
நடிகர் ஆர். மாதவன், துரந்தர் 2 படத்தில் இடம்பெற்ற புகைபிடிக்கும் காட்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் வீடியோ செய்தி மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நமஸ்கார், நான் ஆர். மாதவன். துரந்தர் குடும்பத்தின் சார்பில், எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த அன்புக்கு நன்றி. எங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை. சமீபத்தில் எங்களுக்கு தெரிய வந்தது, சிலருக்கு படத்தின் ஒரு காட்சியில் நான் குரு கோபிந்த் சிங் ஜி அவர்களின் தசம் கிரந்த் வசனங்களைச் சொல்லும் போது சிகரெட் புகைத்தது போல தோன்றியதால் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மாதவன் தனது வீடியோவில் மேலும் கூறுகையில், “இந்த காட்சியின் போது, வசனங்களைச் சொல்லும் முன், இயக்குநர் ஆதித்யா தர்ஜி மிகவும் கவனமாக, என்னிடம் கூறினார் – ‘இந்த வரிகளைச் சொல்லும் முன்பே, சிகரெட்டை அணைத்துவிடுங்கள். உங்கள் வாயில் இருந்து புகை வரக்கூடாது, திரையில் எங்கும் புகை தெரியக்கூடாது, உங்கள் கையில் சிகரெட் இருக்கக்கூடாது. ஏனெனில் இது எங்களுக்கு மிகவும் புனிதமானது.’” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; துரந்தர் படத்தை பார்க்காத தீபிகா படுகோன்.. என்ன காரணம்? ரசிகர்கள் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com