திருவாரூர் VS சேப்பாக்கம்.. எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் உதயநிதி?

Assembly Election 2026: 2026 சட்டமன்ற பொது தேர்தலில் உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது தெரியுமா?

Published on: March 24, 2026 at 5:15 pm

சென்னை மார்ச் 24, 2026; திமுகவின் முகமாக பார்க்கப்படும் உதயநிதி, நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கினார்; தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்- துர்கா ஸ்டாலின் மகனான உதயநிதி, சினிமாவை பொருத்தமட்டில் ஆரம்ப காலகட்டத்தில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இவரின் தயாரிப்பில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் உதயநிதி அரசியலுக்குள் வந்தார்; அதன்படி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி, மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

இந்த நிலையில் விளையாட்டு துறை அமைச்சராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய உதயநிதி பின் நாட்களில் துணை முதல்வர் பதவிக்கு உயர்ந்தார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற கேள்விக்கு உதயநிதி நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரத்தியேகமாக தெரிவித்தார்.

சேப்பாக்கமா? திருவாரூரா?

உதயநிதி ஸ்டாலின் இம்முறை சேப்பாக்கத்தில் போட்டியிடப் போவதில்லை; அவர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறார் என்ற தகவல்கள் முன்னதாக வெளியாகின.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிடுகிறார்; அவர் அந்தத் தொகுதியில் போட்டியிட தான் நேர்காணலில் கலந்து கொண்டார்” என்றார்.

இதையும் படிங்க; 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி.. எந்தத் தொகுதி தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com