ஏப்ரல் 1 முதல் ஏடிஎம் விதிகளில் மாற்றம் – வங்கி வாடிக்கையாளர்கள் நோட் பண்ணுங்க

ATM: ஏடிஎம் (ATM) பயன்பாட்டுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 24, 2026 at 2:01 pm

புதுடெல்லி, மார்ச் 24 2026: ஏப்ரல் 1, 2026 முதல் நாட்டில் உள்ள பல முக்கிய வங்கிகள் ஏடிஎம் (ATM) பயன்பாட்டுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளன. இந்த புதிய மாற்றங்கள் பணம் எடுக்கும் வரம்பு, இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை, UPI மூலம் பணம் பெறும் விதிமுறை மற்றும் கூடுதல் கட்டணங்களில் மாற்றங்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.

புதிய விதிகளின்படி,

UPI மூலம் ATM-இல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளும் இனி வழக்கமான ATM பரிவர்த்தனைகளாகவே கணக்கிடப்படும். இதனால் மாதத்திற்கு வழங்கப்படும் இலவச பரிவர்த்தனை வரம்புக்குள் UPI பணம் எடுப்பதும் சேர்க்கப்படும். இலவச வரம்பை மீறினால் ஒவ்வொரு கூடுதல் பணம் எடுப்பதற்கும் சுமார் ரூ.23 மற்றும் வரிகள் வசூலிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; 1 முதல் 5 ஆண்டு கால எஃப்.டி முதலீடு.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

சில வங்கிகள் டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் உச்சவரம்பிலும் மாற்றங்களை செய்துள்ளன. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கார்டுகளுக்கு முன்பு இருந்த ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கும் வரம்பு, ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற வங்கிகளின் ATM-களை பயன்படுத்தும் போது கிடைக்கும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மாதத்திற்கு 3 முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், அதன் பிறகு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்கள் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை (UPI, நெட் பேங்கிங்) பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி சார்ந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே சரிபார்த்து, தேவையான அளவு பணம் எடுப்பதை திட்டமிடுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் IPO.. ரூ.400 கோடி திரட்ட இலக்கு.. ஒரு பங்கின் விலை ரூ.10!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com