Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2720 குறைந்துள்ளது.
Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2720 குறைந்துள்ளது.

Published on: March 24, 2026 at 10:12 am
சென்னை, மார்ச் 24 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளநிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று சரிவடைந்துள்ளது.
தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ. 5360 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 2240 குறைந்தது. பின்னர் மாலையில் மீண்டும் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 340க்கும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 720 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.14,182க்கும் சவரன் ரூ. 113,456 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்டநிலையில், இன்று ரூ. 10 குறைந்து ரூ. 240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க; எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.பி.ஓ.. விற்பனைக்கு வரும் ஈக்விட்டி பங்குகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com