M K Stalin: எங்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா என தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
M K Stalin: எங்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா என தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Published on: March 24, 2026 at 11:30 am
சென்னை மார்ச் 24, 2026; அமெரிக்க ஈரான் போர் நிலைமைகளை சுட்டிக்காட்டி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் தளத்தில் சில கேள்விகளை எழுப்பி உள்ளார். எங்களைக் காட்ட பிரதமர் தயாராக இருக்கிறாரா? எனக் கேட்டுள்ளார்.
மேலும் மு.க ஸ்டாலின், “தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துள்ளார்.
மு.க ஸ்டாலின் ட்வீட்
Preparedness cannot be outsourced to the people.
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 24, 2026
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்… pic.twitter.com/b90TgEc7he
மேலும், “தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?” எனவும் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க; 2001-இல் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. சட்டமன்றத் தேர்தல் பிளாஷ்பேக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com