Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 24, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 24, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Published on: March 24, 2026 at 7:08 am
இன்றைய ராசிபலன்கள் (24-03-2026): எந்த ராசிக்கு இன்றைய தினம் சாதகமான பலன்கள் உண்டு 12 ராசிகளின் (24-03-2026) பலன்கள் என்ன? இதில் வேலை, ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை தொடர்பான பல்வேறு கணிப்புகள் உள்ளன.
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்; பொன் பொருள் வாங்க வாய்ப்புகள் உண்டு. புதிய வேலைவாய்ப்புகளுக்கு முயற்சிகள் செய்யுங்கள். தொழில் மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை; கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிரச்சனை இல்லை.
ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய தினம் புதிய வாய்ப்புகளை கொண்டு சேர்க்கும்; மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனை ஒன்று தீர வாய்ப்புள்ளது. இன்று புதிய காரியங்கள் தொடங்கலாம். படிப்படியாக முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே இன்று உங்களது காதல் வாழ்க்கை கைகூடும்; வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். தொழில் போட்டி இருக்கும். உடன் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கடக ராசி
கண்ணியவாதிகள் என பெயர் எடுத்த கடக ராசி அன்பர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு; தொலைதொடர்பு துறையில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு உண்டு. உணவு விஷயத்தில் கவனம் தேவை; இன்று நீங்கள் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அதிகம்.
சிம்ம ராசி
எந்த ஒரு துறையிலும் ஈடுபாட்டுடன் பணிபுரியும் சிம்ம ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளக் கூடாது; உங்களுடன் பணிபுரியும் சக அலுவலக ஊழியர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளுங்கள். இன்று பணம் வரவு உண்டு, தொழிலும் முன்னேற்றம். மன அமைதிக்கு யோகா செய்யுங்கள். வீண் பிடிவாதம் வேண்டாம்.
இதையும் படிங்க; எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.பி.ஓ.. விற்பனைக்கு வரும் ஈக்விட்டி பங்குகள்!
கன்னி ராசி
கன்னி ராசிக்கு காதல் கைகூடும் நேரம் இது; கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடம் அதிக அன்பாக இருப்பீர்கள்; உங்கள் உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும் நேரம். மன அமைதிக்கு இறை வழிபாடு சிறந்தது.
துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே இன்றைய தினம் வியாபாரத்தில் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்; போட்டி பொறாமைகளும் காணப்படும். பணவரவு உண்டு, காதல் வாழ்க்கையை பொருத்தமட்டில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது; புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் வருகிறது. மாணவர்கள் படிப்பில் புத்திசாலியாக திகழ்வார்கள்.
விருச்சக ராசி
விருச்சக ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த ஒரு நல்ல காரியம் இன்று நடைபெறும்; அம்மன் வழிபாடு, உங்களுக்கு கை கொடுக்கும். யாரிடமும் சண்டை பிடிக்க வேண்டாம்; உங்களை விட்டுச் சென்ற உறவு இன்று தேடி வரும்.
தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு; நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து மகிழ்வீர்கள்; யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். மற்றவர்களிடம் உங்களது ரகசியங்களை பகிர்ந்து கொள்ளவும் கூடாது. அரசியல்வாதிகளுக்கு இன்றைய தினம் கூடுதல் ஆதரவை கொடுக்கும்.
இதையும் படிங்க; தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. கிராமுக்கு ₹7,000 வரை குறைவு.. புதிய விலையை செக் பண்ணுங்க!
மகர ராசி
மகர ராசி நேயர்களே, இன்று மன அமைதிக்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது; புதிய தொழில்களில் கவனம் தேவை. புதிய இடங்களுக்கு இன்று நீங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு; விவசாயத்தில் ஈடுபடும் நபர்களுக்கு இன்று வருமானம் ஒன்று காத்திருக்கிறது; ஏதேனும் புதிய பணிக்கு நீங்கள் காத்திருந்தால் அதற்கு இன்று விண்ணப்பிக்கலாம்.
கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, இன்று வணக்கத்திற்கு மாறாக நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்; நாம் இந்தப் பணியை, ஏன் இவ்வளவு தாமதித்தோம், முன்பே முடித்திருக்கலாமே எனவும் நினைப்பீர்கள். நில புலங்கள் வாங்க யோகம் உண்டு, இன்று புதிய அதிசயம் ஒன்று உங்களைத் தேடி வரும்.
மீன ராசி
மீன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அனுகூலமான தினம்; புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணத்தை சுக காரியங்களில் முதலீடு செய்வீர்கள். தங்கம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை; சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது அவசியம். பித்ரு கடன் தீர காக்கைக்கு உணவளியுங்கள்.
இதையும் படிங்க; எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com