Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: March 21, 2026 at 7:10 pm
Updated on: March 21, 2026 at 7:37 pm
புதுடெல்லி, மார்ச் 21 2026: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலில் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அவசியம் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தியதுடன், முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை கண்டித்தார். மேலும் சர்வதேச கடல் போக்குவரத்து வழிகள் பாதுகாப்பாகவும் திறந்தவையாகவும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spoke with President Dr. Masoud Pezeshkian and conveyed Eid and Nowruz greetings. We expressed hope that this festive season brings peace, stability and prosperity to West Asia.
— Narendra Modi (@narendramodi) March 21, 2026
Condemned attacks on critical infrastructure in the region, which threaten regional stability and…
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவும், பதற்ற நிலையை சமாளிக்க தூதரக முறையிலான தீர்வு அவசியம் என்றும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி, ரமலாம் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். இந்தப் பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என நம்பிக்கை தெரிவித்தேன்
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் உள்ள, பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கப்பல் வழித்தடங்கள் திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தினேன்.
ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான ஈரானின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுகளைத் தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க; பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ? யார் இந்த சோஃபியா ஃபிர்தோஸ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com