N. Rangaswamy: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியிடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது; கூட்டணியில் அதிகபட்சமாக என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
N. Rangaswamy: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியிடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது; கூட்டணியில் அதிகபட்சமாக என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Published on: March 21, 2026 at 10:44 am
புதுச்சேரி மார்ச் 21, 2026; புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது; கூட்டணியில் அதிகபட்சமாக முதலமைச்சர் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தமட்டில் பத்து இடங்களில் போட்டியிடுகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு இரு இடங்களும், இலட்சிய ஜனநாயக கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியை பொருத்தமட்டில் அங்கு பாரதிய ஜனதா தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; முதலமைச்சராக முதுபெரும் அரசியல் தலைவர் என் ரங்கசாமி பொறுப்பில் உள்ளார். இவர் இம்முறை இரு தொகுதிகளில் களம் காண்பார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி யூனியனில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; மொத்தமுள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி, எண்ணிக்கை செய்யப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க; நடிகர் விஜய் திடீர் மும்பை பயணம்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com