Lionel Messi: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, அதிகாரப்பூர்வ போட்டிகளில் 900 கோல்கள் அடித்த இரண்டாவது கால்பந்து வீரராக உயர்ந்துள்ளார்.
Lionel Messi: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, அதிகாரப்பூர்வ போட்டிகளில் 900 கோல்கள் அடித்த இரண்டாவது கால்பந்து வீரராக உயர்ந்துள்ளார்.

Published on: March 20, 2026 at 6:38 pm
புளோரிடா, மார்ச் 20, 2026: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, அதிகாரப்பூர்வ போட்டிகளில் 900 கோல்கள் அடித்த இரண்டாவது கால்பந்து வீரராக வரலாறு படைத்துள்ளார். இந்நிகழ்வு நேற்று, புளோரிடாவில் நடைபெற்ற CONCACAF Champions Cup இரண்டாவது காலிறுதியில், இன்டர் மியாமி CF மற்றும் நாஷ்வில் SC இடையிலான 1-1 சமனில் நிகழ்ந்தது.
இந்த சாதனை மூலம், அர்ஜென்டினா நாயகன் மற்றும் இன்டர் மியாமி கேப்டன் மெஸ்ஸி, தனது நீண்டகால போட்டியாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்துள்ளார். ரொனால்டோ, 2024 செப்டம்பரில் 900 கோல்கள் அடைந்தார். தற்போது அவர் 965 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 1,000 கோல்கள் அடைவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி 1,142 போட்டிகளில் 900 கோல்கள் அடித்துள்ளார்; ரொனால்டோ 1,236 போட்டிகளில் அந்த இலக்கை அடைந்தார். பிரேசில் நாயகன் பெலே, 765 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரான்ஸ் பேட்மிண்டன்.. இந்தியர்கள் அதிர்ச்சி தோல்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com