Kerala High Court: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Kerala High Court: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Published on: March 19, 2026 at 2:51 pm
கொச்சி, மார்ச் 19, 2026: கேரள மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஐ.பி.எல். என்பதன் விரிவாக்கம் இந்தியன் பிரிமீயர் லீக் என உள்ளது. இதில் இந்தியன் என்ற பெயர் இணைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதம் ஆகும். ஆகவே இந்தப் பயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனுவை, அஷீக் காரோத் என்பவர் தாக்கல் செய்து இருந்தார். மேலும், மனுதாரர், “இது தேசிய அளவிலான அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டி அல்ல; ஆகவே, ஐ.பி.எல் இந்தியன் பிரிமீயர் லீக் என அறிவிக்கப்பட்டுள்ளது சட்ட விரோதம்” என வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம், மனுதாரரின் வாதத்தில் “எந்த சட்ட அடிப்படையும் இல்லை” எனத் தெரிவித்தது. தொடர்ந்து, ஐ.பி.எல் பல ஆண்டுகளாக உலகளவில் பிரபலமான போட்டியாக இருந்து வந்த நிலையில், இப்போது தான் அதன் பெயரை எதிர்த்து மனு தாக்கல் செய்வது ரசிக்கத்தக்கது அல்ல எனவும் குறிப்பிட்டது.
இதையடுத்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரிமீயர் லீக் என்ற பிராண்டிங் உரிமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விராத், ரோகித் ஓய்வு.. ரூ.2 கோடியை இழந்த பும்ரா.. இப்படி ஓர் சிக்கலா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com