SBI Loan Fraud Case: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி இன்றும் (மார்ச் 19) நாளையும் (மார்ச் 20) புதுடெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
SBI Loan Fraud Case: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி இன்றும் (மார்ச் 19) நாளையும் (மார்ச் 20) புதுடெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.

Published on: March 19, 2026 at 2:15 pm
புதுடெல்லி, மார்ச் 19, 2026: பிரபல இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி இன்று (மார்ச் 19) மற்றும் நாளை (மார்ச் 20) புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில், அனில் அம்பானி சி.பி.ஐ முன்பாக விசாரணைக்கு ஆஜராகிறார்.
முன்னதாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தரப்பில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த எஃப்.ஐ.ஆர் தொடர்பான விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜராகிறார். அவரிடம் இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த எஃப்.ஐ.ஆர், முக்கியமாக ₹2,929 கோடி கடன் மோசடி குற்றச்சாட்டுகள் விசாரணையின் மையமாக உள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே, அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ மார்ச் 5, 2026 அன்று புதிய FIR பதிவு செய்துள்ளது. இது குறித்த புகாரில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ₹1,085 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு பெரிய வங்கிகளின் புகார்களும் அனில் அம்பானி மீது சட்ட அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
மேலும் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரிலையன்ஸ் குழுமத்தின் நம்பகத்தன்மை மற்றும் அனில் அம்பானியின் வணிகப் பெயர் கடுமையாக பாதிக்கப்படலாம்.
தொடர்ந்து, அம்பானி மற்றும் ரிலையன்ஸ் குழுமம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமானத்தில், ‘இருக்கை தனி கட்டணம்’ வசூலிக்கக் கூடாது.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com