திருமணம் செய்யாமல் உறவில் இருப்பதே சிறந்தது.. கேரள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Aishwarya Lekshmi: திருமணம் செய்யாமல் உறவில் இருப்பதே சிறந்தது என கேரள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

Published on: March 19, 2026 at 10:42 am

திருவனந்தபுரம் மார்ச் 19, 2026; மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி; இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழைப் பொறுத்தவரை இவருக்கு கட்டா குஸ்தி என்ற திரைப்படம், கவனம் ஈர்த்து கொடுத்தது; இந்த திரைப்படத்தில், குஸ்தி தெரிந்த பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். எனினும் கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஓர் கதாபாத்திரம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும், வரவேற்பை பெற்றது.

திருமணம் செய்யாமல் உறவு

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” என்னைப் பொருத்தவரை திருமணம் செய்து கொண்டு பிரச்சனையில் சிக்கி தவிப்பதை விட திருமணம் செய்யாமல் தொடரும் உறவே சிறந்தது” என்றார். மேலும், ” என்னைப் பொருத்தவரை எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை; ஒருவருக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்பதற்காக இருவரும் கஷ்டப்பட்டு ஒரு உறவில் நீடிப்பது என்பது சரியானது கிடையாது.

ஆகவே திருமணம் போன்ற இந்த உறவை நான் சீர் தூக்கிப் பார்க்கிறேன்; ஒருவருக்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த உறவு திருமணம் தான் தொடர வேண்டும் என்பதல்ல. திருமணம் செய்து கொள்ளாமலும் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பொறுத்தவரை இதுபோன்று தைரியமாக பேசுவது முதல் முறையல்ல; அவர் கடந்த காலங்களிலும் திருமணம் தொடர்பான சிக்கல்களை இருவரும், பேசி அணுக வேண்டும் என்றும் பிரச்சனையில் எந்த ஒரு உறவும் சிக்கித் தவிர்க்க கூடாது என்றும் அவர் தெளிவாக பேசி உள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க: காமவெறி தூண்டும் பாடல் வரிகள்.. பாலிவுட்டுக்கு கட்டுப்பாடு தேவை.. கங்கனா ரணாவத்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com