பத்ரிநாத் ஆலயத்தில் சாரா அலி கான் தரிசனம்.. சனாதனி உறுதிமொழி கோரிக்கை!

Sanatan Affidavit : பத்ரி-கேதார் கோவில் குழுமம் இந்து அல்லாத பக்தர்கள் சனாதன மத நம்பிக்கை உறுதிமொழி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Published on: March 18, 2026 at 1:14 pm

டேராடூன், மார்ச் 18, 2026: பத்ரி-கேதார் கோவில் குழுமம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்து மதத்தைச் சாராத பக்தர்கள், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் வழிபட விரும்பினால், அவர்கள் சனாதன மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சத்தியப்பிரமாணக் கடிதத்தை (அபிடவிட்) சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு, நடிகை சாரா அலி கான் உட்பட, கேதார்நாத் கோவிலுக்கு அடிக்கடி வருகை தரும் அனைத்து இந்து அல்லாத பக்தர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) ஊடகங்களிடம் பேசிய பத்ரி-கேதார் கோவில் குழு தலைவர் ஹேமந்த் திவேதி, இனி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் இந்து அல்லாதவர்கள், சனாதன மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சத்தியப்பிரமாணக் கடிதத்தை (உறுதிமொழி பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், “சனாதன தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ‘நான் சனாதனி; நான் இந்துத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன் என எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்,” என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகை ஷ்ரத்தா கபூர் விரைவில் திருமணம்? மணமகன் யார் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com