பைனாப்பிள் சுவையில் பூந்தி.. இப்படி செஞ்சு அசத்துங்க!

Food: எளிமையான முறையில் பைனாப்பிள் பூந்தி இப்படி ட்ரை பண்ணுங்க.

Published on: March 17, 2026 at 11:23 am

Updated on: March 17, 2026 at 11:25 am

சென்னை, மார்ச் 17, 2026: அனைவரும் விரும்பும் இனிப்பு வகைகளில் ஒன்று பூந்தி. இதை பைனாப்பிள் சுவையில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை- 1¼ கப்
சமையல் சோடா -1 சிட்டிகை
பைனாப்பிள் ஜூஸ் -½ கப்
பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள்.
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு பாகு காய்க்க வேண்டும். சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்த பின்னர் பாகு ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்து கலக்கவும். அதன் பிறகு கடலை மாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூந்தி கரண்டியை வைத்து மாவை ஊற்றி மற்றொரு கரண்டியால் தேய்த்து விடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்த பாகில் சேர்க்கவும். நன்கு ஊறியதும் சுவையான பைனாப்பிள் பூந்தி ரெடி.

இதையும் படிங்க: பள்ளிவாசல் நோன்பு கஞ்சி.. அதே சுவையில் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com