Elangovan Recalls BJP Role in DMK Defeat: 2001ல் தி.மு.க தோல்விக்கு, பா.ஜ.க.தான் காரணம் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
Elangovan Recalls BJP Role in DMK Defeat: 2001ல் தி.மு.க தோல்விக்கு, பா.ஜ.க.தான் காரணம் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Published on: March 16, 2026 at 5:55 pm
சென்னை, மார்ச் 16, 2026: தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இன்று (திங்கள்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் நடிகர் விஜயின் அரசியல் பயணம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் சென்றால் எங்களுக்கு நன்மைதான்; பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான்” என்றார்.
தி.மு.க. தோல்விக்கு பா.ஜ.க.தான் காரணம்
தொடர்ந்து, “பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001ல் திமுக தோற்றது” எனவும் அவர் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. நாம் தமிழர் வழக்கம் போல் தனித்து களம் காண்கிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது கூட்டணி நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்? மேட்ரிக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com