Wife Killed in Tirunelveli Bus Stand: திருநெல்வேலியில் 24 வயது மனைவியை சந்தேகம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்துள்ளார்.
September 16, 2026
Wife Killed in Tirunelveli Bus Stand: திருநெல்வேலியில் 24 வயது மனைவியை சந்தேகம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்துள்ளார்.

Published on: March 16, 2026 at 3:51 pm
Updated on: March 16, 2026 at 3:53 pm
திருநெல்வேலி, மார்ச் 16, 2026: திருநெல்வேலி நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், பாளமடை கிராமத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுதாகர் (29), தனது 24 வயது மனைவி பேச்சியம்மாளை திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்த நிலையில், சுதாகர் தானாகவே ஜங்ஷன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இந்தத் தம்பதியினர் குடும்ப தகராறால் சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர் எனக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
சுதாகர் தனது மனைவிக்கு வெளிப்புற உறவுகள் உள்ளன என சந்தேகித்ததாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பேச்சியம்மாள், ஒரு துணி விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15, 2026) காலை 10.15 மணியளவில், வேலைக்கு சென்றக்கு பேச்சியம்மாளை பின்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் தடுத்துள்ளார் சுதாகர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை சுதாகர் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டர்.. பிரபல ரவுடி கணேஷ் மரணம்!
CM Vijay: முதலமைச்சர் விஜயின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Anbil Mahesh Poyyamozhi: தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தியது.
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள் செப்டம்பர் 17, 2026 அன்று தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com