பற்றி எரிந்த தீ.. துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு.. சேவைகள் மூடல்!

Iran Israel War:: விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், துபாய் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

Published on: March 16, 2026 at 1:32 pm

துபாய், மார்ச் 16, 2026: துபாய் விமான நிலையம் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு தற்காலிகமாக விமான சேவைகளை நிறுத்தியது.

அமெரிக்கா-இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் இராணுவ, தூதரக மற்றும் மூலோபாய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

துபாய் விமான சேவைகள் நிறுத்தம்

இந்த நிலையில், துபாய் விமான நிலையத்தில் திங்கட்கிழமை “ட்ரோன் தாக்குதல் சம்பவம்” காரணமாக அருகில் தீ ஏற்பட்டது. இதனால் துபாய் விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்க இராணுவ தளங்களை கொண்ட கல்ஃப் நாடுகள் திங்கட்கிழமை ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டன.

சவுதி அரேபியா நள்ளிரவு முதல் 60-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்ததாக தெரிவித்தது. ஐக்கிய அரசு அமீரகமும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தடுத்ததாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் தாக்குதல்கள் டெஹ்ரான் எரிபொருள் களஞ்சியங்களை குறிவைத்தது என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: 900 ஏவுகணைகள், 2,500 ட்ரோன்கள்.. வளைகுடா நாடுகளை தாக்கிய ஈரான்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com