ஐபிஎல் போட்டிக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து விலகிய ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்!

IPL 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிளசிங் முசாரபானி பாகிஸ்தான் பிரீமியர் லீகில் இருந்து விலகியுள்ளார்.

Published on: March 14, 2026 at 1:38 pm

Updated on: March 14, 2026 at 1:39 pm

புதுடெல்லி, மார்ச் 14 2026: இந்தியன் பிரிமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) கிரிக்கெட் தொடர் வருகிற 28-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணித் தேர்வில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஷூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் வங்கதேசத்தில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்ததாக கூறி பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஸ்தாபிஷூர் ரகுமானை அணியில் இருந்து விடுவித்தது.

இதன் பின்னர் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளசிங் முசாரபானியை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக பிளசிங் முசாரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.

மேலும், கடந்த ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது பந்து வீச்சாளராகவும் அவர் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; ஹாக்கி மகளிர் உலகக் கோப்பை 2026.. இடத்தை உறுதிப்படுத்திய இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com