Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்று (மார்ச் 14, 2026) வெளியாகலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்று (மார்ச் 14, 2026) வெளியாகலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.

Published on: March 14, 2026 at 12:01 am
Updated on: March 14, 2026 at 12:07 am
புதுடெல்லி மார்ச் 14, 2026; தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் மனு தாக்கல் வாக்கு எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்களும் இன்று (சனிக்கிழமை) வெளியாகலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார், இது தொடர்பாக ஆய்வு நடத்தி இன்று மாலை 3 மணிக்கு மேல் செய்தியாளர் சந்திப்பில், இது குறித்த விபரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்தத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
வழக்கம்போல் நாம் தமிழர் தனித்து இந்த தேர்தலில் களம் காண்கிறது; 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அறிமுக கட்சியான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையிலான கூட்டணியை மட்டுமே ஏற்போம் எனக் கூறி வருகிறது; இதனால் தமிழ்நாட்டில் இம்முறை நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணையை மார்ச் மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது நினைவு கூறத்தக்கது .
இதையும் படிங்க; தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும்.. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com