ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த விஜய் வசந்த்

Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

Published on: March 12, 2026 at 5:31 pm

புதுடெல்லி, மார்ச் 12 2026: ஈரான் இஸ்ரேஸ் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து அவர் வழங்கிய கடிதத்தில், கன்னியாகுமரி தொகுதியைச் சேர்ந்த பல மீனவர்கள் தற்போது கெஷ்ம் தீவு பகுதியில் உள்ள சலாக் (Salakh) என்ற இடத்தில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றமான சூழ்நிலை காரணமாக அவர்கள் அங்கு சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு அவர்களின் நிலைமையை உறுதி செய்யவும், தேவையான தூதரக உதவிகளை வழங்கி அவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் பெயர்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களுடன் கூடிய விரிவான பட்டியலையும் அவர் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.

இதையும் படிங்க : திருநெல்வேலியில் 680 கிலோ கஞ்சா.. தீயிட்டு அழித்த போலீசார்!

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்! Sukanya Samriddhi Fraud at Nagercoil PO

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com