முதல் படத்திலேயே சர்வதேச அங்கீகாரம்.. சாதித்த மயிலா திரைப்படம்!

Mayila: முதல் படத்திலேயே சர்வதேச அங்கீகாரம் பெற்று சாதித்துள்ளது மயிலா திரைப்படம்.

Published on: March 10, 2026 at 8:00 am

Updated on: March 9, 2026 at 10:38 pm

சென்னை, மார்ச் 10, 2026: செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான மயிலா திரைப்படம் சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை மார்ச் 9, 2026: தமிழ் மற்றும் மலையாளத்தில் பல துணைவேடங்களில் நடித்து பிரபலமானவர் செம்மலர் அன்னம். இவர் ‘மயிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தில் மெலடி டார்காஸ் மற்றும் சுடர்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நியூட்டன் சினிமாஸ் சார்பில் ஆன்டோ சிட்டிலப்பிள்ளி தயாரித்துள்ளார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் வழங்குகிறார். இப்படம் 2026-ஆம் ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசிய நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்படும் நெட்பாக் பிரிவில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை மற்றும் வறுமையின் பிடியில் சிக்கி உழலும் ஒரு உழைக்கும் பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தை மகளிர் தினத்தை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: விஜயின் ஜனநாயகன் எப்போது திரையிடப்படும்? புதிய சிக்கல் என்ன? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com