கிடுகிடுவென எகிறிய உர விலைகள்.. ஏற்றமும்- காரணமும்!

Fertiliser price hike: இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, மேற்கு ஆசியாவில் இருந்து வரும் உரப் பொருட்கள் வழங்குதலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

Published on: March 10, 2026 at 7:00 am

Updated on: March 9, 2026 at 10:58 pm

சென்னை, மார்ச் 10, 2026: இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, மேற்கு ஆசியாவில் இருந்து வரும் உரப் பொருள்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தற்போது பங்கு நிலைமை சீராக உள்ளது என்பதே ஆறுதல். எனினும், அடுத்த பயிர் பருவம் இன்னும் மூன்று மாதங்களில் வர உள்ளது.

இந்தியாவில் பயிர்களுக்கு உணவாக உரங்கள் செயல்படுகின்றன. அவை தானியங்கள், பழங்கள் அல்லது காய்கறிகள் விளைய உகந்த நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K), சல்பர் (S) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. மேலும், இந்தியாவை பொருத்தமட்டில் எண்ணெய் விதைகள் மற்றும் பருப்பு வகைகளைத் தவிர, பெரும்பாலான உணவு மற்றும் பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. ஆனால் உரங்களில் அது இல்லை.

இதையும் படிங்க:

2025-26 (ஏப்ரல்–மார்ச்) ஆண்டில், இந்தியா சுமார் 1 கோடி டன் யூரியா மற்றும் 65 இலட்சம் டன் டை-அமோனியம் பாஸ்பேட் (DAP) இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் உள்நாட்டு உற்பத்தி முறையே 3 கோடி டன் மற்றும் 35 இலட்சம் டன் மட்டுமே ஆகும். அந்த வகையில், நாட்டின் முழு 30 இலட்சம் டன் பொட்டாசியம் உர (MOP) தேவையும் இறக்குமதியிலேயே பூர்த்தி செய்யப்படும்.

அதேசமயம், நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K), சல்பர் (S) ஆகியவை பல்வேறு கலவைகளில் உள்ள சிக்கலான உரங்களில் உள்நாட்டு உற்பத்தி 1.25 கோடி டன், இறக்குமதி 40 இலட்சம் டன் என கணிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மேற்கு ஆசியா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் உர இறக்குமதிகளின் மீது எவ்வளவு அதிகமாக சார்ந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்நிலையில் அங்கு போர் நடப்பதால் இந்தியாவில் உரத் தேவை ஏற்பட்டுள்ளது. இதுவே விலை ஏற்றத்துக்கு முதன்மை காரணமாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் தங்கம், டாலர் கையிருப்பு புதிய உச்சம்.. ரிசர்வ் வங்கி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com