ஹர்திக் பாண்ட்யாவை கிஸ் அடித்த ‘லக்கி சார்ம்’.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!

Hardik Pandya: 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, ஹார்திக் பாண்ட்யா தனது காதலி மஹீகா ஷர்மா மைதானத்தில் முத்தமிட்டுள்ளார்.

Published on: March 9, 2026 at 12:13 pm

அகமதாபாத், மார்ச் 9, 2026: 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு, ஹார்திக் பாண்ட்யா தனது காதலி மஹீகா ஷர்மா அளித்த ஆதரவு குறித்து மனம் திறந்து பேசினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடந்த கொண்டாட்டத்தின் போது, மஹீகா ஷர்மா மைதானத்தில் பாண்ட்யாவை முத்தமிட்டார். பாண்ட்யா, அவரை தனது “லக்கி சார்ம்” என்று அழைத்து நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஹர்த்திக் பாண்ட்யா, “அவள் என் வாழ்க்கையில் வந்ததிலிருந்து நான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய ஹர்த்திக், “இது தான் நான் எப்போதும் வாழ்ந்த வெற்றி. இதற்காகவே நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். நான் கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி.. இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்..வெல்லப்போவது யார்?

மேலும், “அதிகப்படியான கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன். 2024-இல் நான் இதனை கூறினேன். நான் விளையாடும் தொடரில் அனைத்து வகையான கோப்பையும் வெல்லப்போகிறேன். அதில் நான் நம்பிக்கை வைத்தேன். இந்த கோப்பை அதற்கான சான்று” என்றார்.

உலக கோப்பையை வென்ற இந்தியா

தற்போது, இந்தியா தனது டி20 உலகக் கோப்பை பட்டத்தை பாதுகாத்த முதல் அணியாக மாறியுள்ளது. இந்த இரு கிரிக்கெட் தொடரிலும் ஹார்திக் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டி-20 உலக கோப்பை வெற்றி.. டிராவிட், லட்சுமணன், அகர்கருக்கு நன்றி.. கௌதம் கம்பீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com