தமிழ்நாட்டில் ₹500 கோடி விஞ்ஞான ஊழல்.. அன்புமணி பரபரப்பு அறிக்கை!

Anbumani Ramadoss: “ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.500 கோடி சுருட்டல், விஞ்ஞான முறை ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: March 7, 2026 at 3:54 pm

சென்னை மார்ச் 7 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகர்களிடமிருந்து சந்தைக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க கிடங்குகள் இல்லாமல் உழவர்கள் அவதிப்படும் நிலையில், அவர்களின் பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்று ஊழல்கள் நடைபெற்றிருப்பதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றப்பட்ட தரவுகள்வாரியாக அறிந்து கொள்ள முடிகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.75 கோடி அளவுக்கும், தமிழ்நாடு முழுவதும் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றன. 4 ஆண்டுகளில் ரூ.500 கோடி ஊழல் என்பது பெருந்தொகையாகும். இதைக் கொண்டு தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கிடங்குகளை கட்டியிருக்க முடியும். அவ்வாறு கட்டியிருந்தால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருந்திருக்காது” என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையடுத்து, “வேளாண்மை விற்பனைக் கூடங்களில் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை சும்மா கிடைக்க வில்லை. உழவர்கள் வியர்வை சிந்தி விளைவித்த பொருள்களை வாங்கி விற்பதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியைத் தான் வணிகர்கள் சந்தைக் கட்டணமாக செலுத்துகின்றனர். அதைக் கொண்டு உழவர்களுக்கு நன்மை செய்யாமல் ஆட்சியாளர்களே சுருட்டிக் கொள்வதை மன்னிக்கவே முடியாது. இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. எனவே, 27 சந்தைக் குழுக்களிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க; கோவை மாணவி பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com