ஆளுநர் மாளிகைக்கு மு.க ஸ்டாலின் திடீர் விஜயம்.. கவர்னர் ஆர்.என் ரவியுடன் சந்திப்பு!

MK Stalin: கவர்னர் ஆர் என் ரவியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை மக்கள் மாளிகையில் ( ராஜ் பவன்) சந்தித்து பேசினார்.

Published on: March 7, 2026 at 2:07 pm

Updated on: March 7, 2026 at 2:09 pm

சென்னை மார்ச் 7 2026; சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் MK ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆளுநர் RN ரவி இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில் திமுக தரப்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன அதில் முதன்மையான கோரிக்கை தமிழகத்திலிருந்து ஆளுநர் ஆர்.என் ரவியை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்பதுதான். இந்த நிலையில் சமீபத்தில் ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார்; மேற்கு வங்க ஆளுநர் தனது பதவியை ராஜினமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து பேசி உள்ளார்; இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தினைக் கூட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புறக்கணித்து வந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க; புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளர் யார்.. கூட்டணிக்கு யார் தலைமை? சிக்கலில் காங்கிரஸ்?

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
P Chidambaram

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com