Kejriwal | டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைதாகியுள்ள முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செப்.13ஆம் தேதி வழங்குகிறது.
Kejriwal | டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைதாகியுள்ள முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செப்.13ஆம் தேதி வழங்குகிறது.
Published on: September 12, 2024 at 2:29 pm
Kejriwal | டெல்லி கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை (செப்.13, 2024) தீர்ப்பு வழங்குகிறது. அதாவது, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பை வழங்கவுள்ளது.
கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஒன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டதன் சட்டபூர்வமான தன்மையை எதிர்க்கிறது. மற்றொன்று அவர் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இது தொடர்பாக கெஜ்ரிவாலின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நிராகரித்தது.
அத்தோடு, ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் உடனடியாக மேல்முறையீடு செய்தார். முன்னதாக, இதே ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்து வந்த பணமோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றக் காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 70 வயதை கடந்தவர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் நீட்டிப்பு; ரூ.5 லட்சம்வரை சிகிச்சை: மோடி அமைச்சரவை ஒப்புதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com