வெளியூர் போறீங்களா, ஈஸியா பொட்டலம் கட்டலாம்: லெமன் ரைஸ் இப்படி ட்ரை பண்ணுங்க!

Food | செஃப் தாமு ஸ்டைலில் எலுமிச்சை சாதம் செய்வது எப்படி? என்று இதில் பார்க்கலாம்.

Published on: September 12, 2024 at 11:53 am

Updated on: September 12, 2024 at 11:58 am

Food | ரயில் பயணம், சுற்றுலா, வெளியூர் திருவிழா என குடும்பத்தோடு செல்லும் பெரும்பாலான நபர்களின் விருப்ப தேர்வு எலுமிச்சை சோறு ஆகும். இந்த லெமன் ரைஸ்-ஐ செஃப் தாமு ஸ்டையில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேகவைத்த அரிசி – 1 கப்
எலுமிச்சை – 2
முந்திரி-10
மிளகாய் – 2
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் –
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
நிலக்கடலை – 20 கிராம்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு பொரிந்ததும் அதனுடன் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும். இவை சிவந்து வந்ததும் இதனுடன் முந்திரி பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்க்க வேண்டும்.

பின்னர் இவை சிவந்து வந்ததும் இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை ஆப் செய்ய வேண்டும். மேலும், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் வடித்த சாதத்தை இந்த கலவையுடன் சேர்ந்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது சுவையான லெமன் ரைஸ் ரெடி.

இதையும் படிங்க : இரண்டே இரண்டு தக்காளி போதும்.. சுவையான ரசம் ரெடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com