மெசேஜை மறைத்து அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

WhatsApp: வாட்ஸ் அப் செயலியில் ஸ்பாய்லர் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Published on: March 3, 2026 at 3:30 pm

சென்னை, மார்ச் 3 2026: பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியான வாட்ஸ் அப் (whatsapp) அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ‘ஸ்பாய்லர்’ என்ற புதிய ஆப்ஷன் வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் பற்றிய புதிய அப்டேட்டுகளை வெளியிடும் வாபீட்டா இன்ஃபோ இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் மெசேஜை ஸ்பாய்லர் ஆப்ஷனில் தேர்வு செய்து அனுப்பினால், அதை பெறுபவர்களுக்கு மெசேஜ் நேரடியாக தெரியாது. அந்த மெசேஜில் ஒருமுறை டேப் செய்தால் மட்டுமே அதில் உள்ள விவரங்கள் தெரியும்.

குரூப் சாட்டிலும் இதுபோன்ற மெசேஜ் அனுப்பும் வசதியை கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டெக்ஸ்ட் மெசேஜ் க்கு மட்டும் இந்த ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளதாகவும் விரைவில் இமேஜ்,பிடிஎப் போன்றவற்றையும் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி அனுப்பும் வகையில் விரிவுபடுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஐஓஎஸ் வர்ஷன் 26.6.10.71 இல் இந்த அப்டேட்டை காண முடிகிறது. இதே போன்ற வசதி ஆப்பிள் ஐ மெசேஜ் சேவையில் ஏற்கனவே உள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் டெக்ஸ்ட் மெசேஜை மறக்க முடியும்.

இதையும் படிங்க: ரூ.80 ஆயிரம் விலையில் சாம்சங் கேலக்ஸி? மார்க்கெட்டுக்கு வரும் 3 மாடல்கள்.. முழு அலசல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com