நாங்குநேரி இரட்டை கொலை..எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Edappadi Palaniswami: நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: March 3, 2026 at 12:56 pm

சென்னை, மார்ச் 3 2026: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடம்போடுவாழ்வு கிராமத்தில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் அந்த வழியாக வந்தவர்களை சரமாரியாக வெட்டியது. மேலும் அவர்களின் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கும்பல் நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் அங்குள்ள தேநீர் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கூடியிருந்தவர்களை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இந்த தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜான் செங்கல் சூலையில் பணியாற்றிய வடமாநில தொழிலாளி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெல்லை சரக டிஐஜி சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர் மேலும் 9 பேர் கொண்ட இந்த கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல்-ஈரான் போர்: சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த 217 பேர்

இந்த இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து நாங்குநேரி பகுதியில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த கொலை சம்பவம் கஞ்சா போதை தாக்குதலா அல்லது சாதி முதலா. என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் அரங்கேறிய கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்தும் திமுக அலட்சியப் போக்கின் விளைவு இது.

தென் மாவட்டங்களில் நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது தென்பகுதிகளை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது திமுக அரசின் எண்ணமா? மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, மோதல்களை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கூடுதலாக ரூ. 2000 முதியோர் உதவித்தொகை..விளிம்பு நிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி.. முதலமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com