Supreme Court Chief Justice Suryakanth: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
Supreme Court Chief Justice Suryakanth: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

Published on: March 2, 2026 at 6:38 pm
புதுடெல்லி, மார்ச் 2, 2026: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் திருக்கோவில் வழிபாடு செய்தார்.
கோவிலின் பிரதான நுழைவாயிலில் அவர் வந்தவுடன், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவி சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி சி.எச். வெங்கடேஷ சௌதரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு ஆகியோர் அவரை வரவேற்றனர்.
வேதப் பாராயணங்கள் முழங்க கோவில் பூஜாரிகள் பாரம்பரிய மரியாதைகளுடன் தலைமை நீதிபதியை வரவேற்றனர். பிரதான தரிசனத்தை முடித்த பிறகு, பூஜாரிகள் அவருக்கு “சேஷவஸ்திரம்” வழங்கினர். பின்னர், வேத பண்டிதர்கள் கோவிலின் ரங்கநாயகுல மண்டபத்தில் அவருக்கு ஆசீர்வாதம் செய்தனர்.
அனைத்து சடங்குகளும் நிறைவடைந்த பின், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தலைமை நீதிபதிக்கு புனித தீர்த்த பிரசாதம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஓவியத்தை வழங்கியது. பின்னர், நீதிபதி சூர்யகாந்த் திருமலையில் உள்ள ஸ்ரீ வராஹசுவாமி கோவிலிலும் வழிபாடு செய்தார்.
இதையும் படிங்க: ஈரானில் குண்டு வெடிப்பு: சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com