நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல.. தொல். திருமாவளவன்!

TN 2026 Assembly Election: இது வழக்கமான தேர்தல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: March 2, 2026 at 1:06 pm

சென்னை, மார்ச் 2, 2026: “நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் இட ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தைகள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொடங்கியுள்ளன.
இதற்காக, தி.மு.க மூத்த தலைவர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவை கூட்டணி கட்சிகளுடன் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று தி.மு.க., வி.சி.க இடையே தேர்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட வி.சி.க, இம்முறை 12 தொகுதிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை) பேசிய தொல். திருமாவளவன், “நடக்கவிருக்கும் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. நாங்கள் பேரம் பேசும் கட்சியும் அல்ல.

வலதுசாரி கட்சிகளை காலூன்ற கூடாது என்பதற்கான தேர்தலாக இது உள்ளது. தொகுதி பங்கீடு எங்களது வலிமைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: 12 தொகுதிகள் கொடுங்க.. தி.மு.க.வுடன் வி.சி.க பேச்சு!

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு Nandambakkam accident

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com