Annamalai: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்- சங்கீதா பிரிவு குறித்து செய்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கு அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பினார்கள்.
Annamalai: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்- சங்கீதா பிரிவு குறித்து செய்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கு அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பினார்கள்.

Published on: February 28, 2026 at 10:59 pm
சென்னை பிப்ரவரி 28 2026; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்க்கு அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கீதா தரப்பில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் நெருக்கம் காட்டுவதாகவும் இதனால் மனரீதியாக தான் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் அந்த நடிகையும் விஜயும் குறித்த செய்திகள் வெளியாகும் போது தானும் தனது குழந்தைகளும் மனதளவிலும் மிக அழுத்தத்தைச் சந்திக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்மேலும் கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் விவாகரத்து மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் கேள்வியும் அண்ணாமலையில் நாகரிக பதிலும்
இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “இந்த பிரச்சனையை திருமதி சங்கீதா, நீதிமன்றம் மற்றும் விஜய் ஆகியோருக்கு இடையேயான பிரச்சனையாக பார்ப்பதாக முதலிலேயே தெளிவு படுத்தினார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் நடிகர் விஜய் குறித்து அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு தாம் பதிலடி கொடுப்பேன் எனக் கூறிய அண்ணாமலை அவரின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க; மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. ஒப்பந்தம் கையெழுத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com