Assembly Election 2026: காங்கிரஸ்- தி.மு.க. இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
Assembly Election 2026: காங்கிரஸ்- தி.மு.க. இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Published on: February 26, 2026 at 5:53 pm
புதுடெல்லி, பிப்.26, 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து நாளை (பிப்.28, 2026) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், இரு கட்சிகளின் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை பிப்.28, 2026ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் முதலில் தி.மு.க.விடம் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தியது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 39 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை சீட் மற்றும் உள்ளட்சி தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றை கேட்கிறது எனக் கூறப்படுகிறது.
த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேசிவருகின்றனர் என்றும் சில நிர்வாகிகள் கூறுகின்றனர். இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இவர்களுடன்தான் தேர்தல் கூட்டணி.. அதிரடியாக அறிவித்த மருத்துவர் ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com