திடீர் இட்லி, சாம்பார்… சசிகலா கட்சியை விமர்சித்த டி.டி.வி தினகரன்

TTV Dinakaran: அமெரிக்கா, ரஷ்யா போல் இந்தியாவை வல்லரசாக்கவே மோடி உழைத்து வருகிறார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். மேலும், சசிகலா கட்சியை திடீர் சாம்பார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Published on: February 25, 2026 at 12:53 pm

சென்னை, பிப்.25, 2026: நாட்டை வல்லரசாக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வருகிறார் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்.24, 2026) பேசிய அவர், “அமெரிக்கா, ரஷ்யா போல் இந்தியாவை வல்லரசாக்கவே மோடி உழைத்து வருகிறார் பாஜக மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பு தருகிறது; அமைச்சரவையில் இடம் தந்து அழகு பார்க்கிறது” எனத் தெரிவித்தார்.

சசிகலா மீது விமர்சனம்

மேலும், சசிகலா புதிய கட்சி குறித்து விமர்சித்து பேசிய டி.டி.வி தினகரன், “சுதந்திர இந்தியாவில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள் வரலாம்” என்றார்.

வெளுக்கும் சாயம்…

மேலும், “அம்மாவின் ஆட்சி அமைப்போம் தொண்டர்களை ஒன்றிணைப்போம் என்று சொன்னவர்களின் சாயம் வெளுக்கின்ற நேரம் வந்திருக்கிறது சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் அம்மாவின் ஆட்சி வருவதை தடுக்க முடியாது; அம்மாவின் தொண்டர்கள் 99% அதிமுக, அமமுகவில் இருக்கின்றனர்” னவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, பாஜக கூட்டணியில் அ.ம.மு.க. அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏராளமான இலக்குகள் உள்ளன.. பாட்டாளி தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!
T20 World Cup

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com