வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்யலாம்!

Food: கோடைக்காலம் நெருங்கும் நிலையில், வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Published on: February 25, 2026 at 12:38 pm

சென்னை, பிப்.25, 2026: அனைவரையும் கவர்ந்த குளிர்பானங்களில் ஒன்று ரோஸ் மில்க். இந்த சம்மருக்கு வீட்டிலேயே ரோஸ் மில்க் எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் ரோஸ் -50 பூக்கள்
பீட்ரூட் – 1 ( சிறிய அளவு )
கற்கண்டு -3 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
பால் -1 லிட்டர்
ஐஸ் க்யூப் -½ கப்

செய்முறை

பன்னீர் ரோஜா மலர்களின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும். ரோஜா இதழ்களை தண்ணீரில் இரண்டு மூன்று முறை அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கி சுத்தம் செய்த பீட்ரூட் துண்டுகள் மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து அரைக்கவும். இதனுடன் ரோஜா இதழ்களை சிறிது சிறிதாக சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சிறிது ரோஜா இதழ்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் 3 கப் கற்கண்டு மற்றும் 1½கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். அடுப்பு தீயை ஹை ப்ளேமில் வைத்து கற்கண்டு முழுவதுமாக கரையும் வரை கலந்து விடவும். சீனி கற்கண்டுக்குப் பதிலாக பனை கற்கண்டும் சேர்த்துக் கொள்ளலாம். பாகு நன்கு கொதி வந்ததும் இதனுடன் மீதமுள்ள ரோஜா இதழ்களை சேர்த்து கலந்து விடவும்.

இதையும் படிங்க: இனி கடைக்கு போய் வாங்க வேண்டாம்,. குழந்தைகள் விரும்பும் ரோஸ் மில்க் கேக்.. வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த கலவையை சேர்த்து கலந்து அடுப்பு தீயை ஹை பிளேமில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும். நன்கு கொதித்து கம்பி பதம் வந்தவுடன் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே இந்த ரோஸ் சிரப்பை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் ஆரிய பிறகு வடிகட்ட கடினமாக இருக்கும். வடிகட்டிய ரோஸ் சிரப்பை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சேகரித்து ஸ்டோர் செய்யவும். இது ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

இப்பொழுது பர்ஃபெக்ட்டான ரோஸ் சிரப் தயார். இந்த ஸ்பெஷலான ரோஸ் சிரப்பை வைத்து எப்படி ரோஸ் மில்க் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். முதலில் பால் பொங்கியதும் ஆரவைத்து 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஐஸ் கியூப், இரண்டு டம்ளர் குளிர்ச்சியான பால் மற்றும் தயார் செய்து வைத்த ரோஸ் சிரப் ¼ கப் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கண்ணாடி டம்ளரில் மாற்றி பரிமாறவும். இப்பொழுது சுவையான ஹோம் மேட் ரோஸ் மில்க் தயார். ரோஸ் மில்க் சிரப் தயார் செய்ய கடினமாக இருந்தால் கடையில் ரெடிமேடாக ரோஸ் மில்க் எசன்ஸ் வாங்கி பயன்படுத்தவும். ரெடிமேடு ரோஸ் மில்க் தயாரிக்க ஒரு மிக்ஸி ஜாரில் 3 சொட்டு ரோஸ் சிரப் எசன்ஸ், ½ கப் சர்க்கரை, ½ கப் ஐஸ் கியூப் மற்றும் இரண்டு கப் குளிர்ச்சியான பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது சுவையான ரெடிமேட் ரோஸ் மில்க் தயார்.

இதையும் படிங்க: பத்தே நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் பிரைடு ரைஸ்.. வீட்டிலேயே செய்யும் வழிமுறை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com