Vaiko: தி.மு.க கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என ம.தி.மு.க தெரிவித்துள்ளது.
Vaiko: தி.மு.க கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என ம.தி.மு.க தெரிவித்துள்ளது.

Published on: February 23, 2026 at 1:56 pm
சென்னை, பிப்.23, 2026: தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்ற தகவல வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மதிமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்ட நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், திமுகவுடன் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “”மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்; எவ்வளவு தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்பதை பின்னர் தெரிவிக்கிறோம்” என உறுதிப்பட தெரிவித்தார்.
இதனால், தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க தனிச்சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : அரசியலுக்கு வருவது முன்னாடி உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? த.வெ.க விஜய் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com