இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை.. கண்ணிய நடத்தை.. ரணதுங்க கோரிக்கை

Ranatunga: பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

Published on: February 20, 2026 at 8:59 pm

Updated on: February 20, 2026 at 9:00 pm

கொழும்பு, பிப்.20, 2026: 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரௌண்டர் இம்ரான் கானுக்கு இப்போது ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், “இம்ரான் கான், கோடிக்கணக்கான பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, நான் மற்றும் பல இளம் கிரிக்கெட் வீரர்கள் மதித்து, பின்பற்ற விரும்பிய ஒருவராகவும் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த கடினமான நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகள் அவரை மனிதாபிமானத்துடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், இரக்கம் நிலவுவது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஷதாப் குழந்தாய் மைதானத்தில் விளையாடி காட்டு.. அப்ரிடி அதிரடி!

தொடர்ந்து, “தனது நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு சரியான கவனிப்பும் நியாயமும் வழங்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் கிரெக் சேப்பல் உலகம் முழுவதிலிருந்தும் 13 முக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து மனுவை தாக்கல் செய்தார்.

அதில் இந்தியாவின் புகழ்பெற்ற வீரர்கள் கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர். அவர்கள், இம்ரான் கானுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்; அவர் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்” என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஏ.சி.சி மகளிர் ஆசிய கோப்பை.. நேபாளத்தை வீழ்த்திய இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com