Share Markets Highlights: இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வை கண்டுள்ளது.
Share Markets Highlights: இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வை கண்டுள்ளது.

Published on: February 20, 2026 at 8:48 pm
மும்பை, பிப்.20, 2026: இந்தியப் பங்குச் சந்தைகள் நிலைத்த நிலையில், நிஃப்டி 25,550க்கு மேல் முடிவு கண்டது. அதேநேரம், சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு கண்டது. எனினும், தொழில்நுட்ப துறையில் சவால்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை நேர்மறையாக முடித்தன. சென்செக்ஸ் 316.57 புள்ளிகள் அல்லது 0.38% உயர்ந்து 82,814.71 இல் நிறைவடைந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 116.90 புள்ளிகள் அல்லது 0.46% உயர்ந்து 25,571.25 இல் நிலைபெற்றது.
வர்த்தக தொடக்கம்
முன்னதாக, புதுப்பிக்கப்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக சந்தைகள் குறைந்த விலையில் வர்த்தகமாகின. இதனால், GIFT நிஃப்டி 37 புள்ளிகள் அல்லது 0.15% சரிந்து 25,367 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலைகள் லகளாவிய குறிப்புகள் சந்தை திறப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டியவைகளாக திகழ்ந்தன.
இதற்கிடையில், முன்னதாக (பிப்.19, 2026) வியாழக்கிழமை தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 50 365 புள்ளிகள் அல்லது 1.41% குறைந்து 25,454 இல் முடிவடைந்தது. அதே நேரத்தில், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் அல்லது 1.48% சரிந்து 82,498 இல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கம் 0.81% உயர்வு.. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு நகரங்களில் ரேட் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com