TVK Vijay: கே.என் நேரு தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
TVK Vijay: கே.என் நேரு தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

Published on: February 20, 2026 at 4:24 pm
சென்னை, பிப்.20, 2026: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி. இன்பதுரை தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில், நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க கெடு
இதற்கிடையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், “நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது
எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் மிகுந்த அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா அல்லது பதவி நீக்கம்
மேலும், “அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சி தான்.. மு க ஸ்டாலினை சந்தித்தபின் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com