Director Pa Ranjith: “என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். ‘மெட்ராஸ்’ படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான்” என குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.
Director Pa Ranjith: “என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். ‘மெட்ராஸ்’ படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான்” என குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

Published on: February 20, 2026 at 12:55 pm
திருவனந்தபுரம், பிப்.20, 2026: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித், கேரளாவில் நடந்த இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது, சென்சார் போர்டு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய பா. ரஞ்சித், “என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். ‘மெட்ராஸ்’ படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான்” என்றார்.
‘நாங்கள் ஏ ப்ளஸ் தருகிறோம்’ என்று சென்சார் குழுவினர் சொன்னார்கள்; எங்களின் கலாசாரம் அவர்களுக்குப் புரிவதில்லை, எங்கள் மொழி புரிவதில்லை. அதுதான் இங்கு பிரச்னை” என்றார்.
தொடரும் பிரச்னை…
தொடர்ந்துப் பேசிய பா. ரஞ்சித், “இது இப்போதுதான் என இல்லை. இந்திய சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது” என்றார். மேலும், “ஆளும் அரசுக்கு எதிராக நாம் எதுவும் பேச முடியாது என வரும்போதுதான் இதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்கிறார்கள்” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்.. நெட்டிசன்கள் ரியாக்ஷன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com