Narendra Modi: வங்கதேச நாட்டின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Narendra Modi: வங்கதேச நாட்டின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா வர பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Published on: February 18, 2026 at 11:49 am
புதுடெல்லி, பிப்.18, 2026: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் குடும்பத்துடன் இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தில், இரு நாடுகளுக்கிடையேயான பலதரப்பட்ட இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில், “இந்தியா–வங்கதேச உறவு, பகிரப்பட்ட வரலாறு, பண்பாட்டு பிணைப்புகள் மற்றும் அமைதி, செழிப்பு குறித்த மக்களின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேச தேர்தலில் தாரிக் ரஹ்மான் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்த வெற்றி வங்கதேச மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மக்களின் இந்தத் தீர்ப்பு நாட்டை அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு நோக்கி வழிநடத்தும்” எனவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 52வது ஜி7 உச்சி மாநாடு.. பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com