ஜப்பானிய பெண் பிரதமர் திடீர் ராஜினாமா.. கூண்டோடு காலியான அமைச்சரவை!

Sanae Takaichi: ஜப்பான் நாட்டின் பிரதமர் சனே தகாய்ச்சி இன்று (பிப்.18, 2026) தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

Published on: February 18, 2026 at 11:15 am

டோக்கியோ, பிப்.18, 2026: ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இன்று (புதன்கிழமை) தனது அமைச்சரவையுடன் சேர்ந்து ராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதனால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ராஜினாமாவுக்கு பிறகு, ஜப்பான் பாராளுமன்றம் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க சிறப்பு கூட்டத்தை நடத்த உள்ளது. இதில் அடுத்த பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

யார் அடுத்த பிரதமர்?

ஜப்பான் நாட்டைப் பொறுத்தவரை சனே தகாய்ச்சி, ஆட்சியில் உள்ள லிபரல் டெமோக்ராட்டிக் கட்சியின் (LDP) தலைவராக இருக்கிறார். இதனால், அவருடைய கட்சி கீழ்சபையில் இரண்டு-மூன்றில் அதிக இடங்களைப் பெற்றிருப்பதால் மீண்டும் அவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 1991க்கு பிறகு வங்கதேசத்தில் முதல் ஆண் பிரதமர்.. இருண்ட இளவரசர்.. யார் இந்த தாரிக் ரஹ்மான்?

இந்த நிலையில், வாக்கெடுப்புக்குப் பிறகு புதிய பிரதமர் அமைச்சரவை நியமனங்களை இறுதி செய்ய உள்ளார். அதன் பின்னர், முதன்மை அமைச்சரவைச் செயலாளர் அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியலை அறிவிப்பார். ஆட்சியில் உள்ள லிபரல் டெமோக்ராட்டிக் கட்சியின் (LDP) தலைவராக இருக்கும் சனே தகாய்ச்சி அவர்கள், 2026 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சிக் கூட்டணி கீழவங்க சபையில் இரண்டு-மூன்றில் அதிக இடங்களை வென்றுள்ளார்.

இதனால் இவர்தான் மீண்டும் பிரதமராக வருவார் என எதிர்பார்ப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. மேலும், இது ஜப்பானின் அரசியல் நிலைமைக்கு முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் புதிய அமைச்சரவை அமைப்பு எதிர்கால கொள்கை முடிவுகளை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்ய பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்குதல்.. 4 இந்தியர்கள் காயம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com