T20 WC: முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்.. யாருடன் தெரியுமா?

T20 WC: டி20 உலகக் கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Published on: February 17, 2026 at 2:40 pm

புதுடெல்லி, பிப்.17, 2026: ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி புதுடெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ‘டி’ குழு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

161 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான், 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணிக்காக அஸ்மதுல்லா ஓமர்சாய், 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். அதற்கு முன் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்கு வீழ்த்திய சிறப்பான சாதனையும் அவர் படைத்தார்.

மற்றொரு போட்டியில், இங்கிலாந்து அணி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ‘சி’ குழு ஆட்டத்தில் இத்தாலியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 203 ரன்கள் இலக்கைத் துரத்திய இத்தாலி அணி 20 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதற்கு முன், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: டி-20 உலக கோப்பை கிரிக்கெட்.. வரலாற்று ‘ரன் வெற்றி’யை பதிவு செய்த இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com